1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (19:09 IST)

என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. திமுக தொண்டர்கள் ஆங்காங்கே கதறியழுதபடி உள்ளனர். மேலும் கருணாநிதியின் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்
 
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் நீண்ட நாள் நண்பரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.