1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (18:47 IST)

போலீஸாரின் பாதுகாப்பு வளையத்தில் கோபாலபுரம் இல்லம்

திமுக குடும்பத்தினர் பலரும் கோபாலபுர இல்லத்தில் வந்துக்கொண்டிருக்கு நிலையில் கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகிறார். தற்போது இன்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைகிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கருணாநிதியின் குடும்பத்தினர் பலரும் கோபாலபுர இல்லத்தில் வந்து கொண்டிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
 
கோபாலபுரம் பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்து மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் காவல்துறையினர் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.