திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (18:42 IST)

ராஜாஜி அரங்கில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வுப் பணி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் மட்டுமின்றி திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்களும் குவிந்துள்ளனர்.
 
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை என காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் சென்னையில் உள்ள ராஜாஜி அரங்கில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் 4-ஆவது தெரு சாலை முழுவதும் காவல்துறையினர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் அந்த பகுதியில்  வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.