வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (15:52 IST)

ஸ்டாலினை பத்தே நிமிடத்தில் காலி செய்வார் ரஜினி: கராத்தே தியாகராஜன்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 மேடைகளில் பேசுவதை விட 10 நிமிட ரஜினியின் கருத்து பிரபலம் ஆகிறது என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
 
விரைவில் கட்சி தொடங்க போவதாக சில வருடங்களுக்கு முன்பே அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்தப்படியே அரசியல் நுழைவுக்கான பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ராகேவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  
 
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில விஷயங்களில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறினார். ஆனால் அது என்ன விஷயம் என்பதை பிறகு கூறுவதாகவும் கூறினார். இதனிடையே ரஜினி ஏமாற்றம் அடைந்ததாக கூறிய விஅஷ்யம் என்னவென தகவல் வெளியாகி வருகின்றன. 
ரஜினி முதல்வர் பதவியை ஏற்க போவதில்லை என தெரிவித்துள்ளதாகவும், கட்சியிலிருந்து தகுதியான நபர் ஒருவர் முதல்வர் பதவியை வகிப்பார் என கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனையே ரஜினி தனிப்பட்ட ஏமாற்றம் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் கராத்தே தியாகராஜன் இது குறித்து பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அடுத்த சில மாதங்களில் கட்சி துவங்கிவிடுவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 மேடைகளில் பேசுவதை விட 10 நிமிட ரஜினியின் கருத்து பிரபலம் ஆகிறது.
 
ரஜினிகாந்தின் ஒவ்வொரு கருத்தும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இருக்கும் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார். 2021ல் தமிழகத்தில் ரஜினி ஆட்சியை பிடிக்கப் போவது நிச்சயம் என்று கூறினார்.