அமித்ஷா, மோடியுடன் சந்திப்பு: ரஜினியின் ப்ளான் என்ன??
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய குருமார்களிடம் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.
இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் ரஜினிகாந்த். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கட்சி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அரசியல் கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பேசினேன். ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் நிறைய கேள்வி எழுப்பினர். இதற்கு நான் அளித்த பதில் திருப்தியாக இருந்தது என தெரிவித்தார்.
அவரது அரசியல் நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்த பேச்சியில் சிஏஏ குறித்தும் பேசினார். ரஜினி தெரிவித்ததாவது, சிஏஏ குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய குருமார்களிடம் கூறினேன். அதற்கு என்னால் முடிந்த உதவியையும் செய்ய உறுதி அளித்துள்ளேன் என தெரிவித்தார்.