ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (08:37 IST)

ரஜினி கூறிய ‘ஏமாற்றம்’ இதுதான்: கசிந்த அதிர்ச்சி தகவல்

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சியின் நெகட்டிவ்களை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் ரஜினிகாந்த் நேற்று மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக வெளிப்படையாக கூறியது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
மனதில் உள்ள எதையும் மறைக்க தெரியாத வகையில் ரஜினிகாந்த் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி கூறிய ஏமாற்றம் என்ன? என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது 
 
ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் டார்கெட் கொடுத்ததாகவும், ஆனால் அந்த டார்கெட் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்றும் அதனால்தான் ரஜினிகாந்துக்கு மாவட்ட செயலாளர்கள் மீது ஏமாற்றம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது 
 
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை யாரும் வெளியே சொல்லக்கூடாது என்று ரஜினிகாந்த் உறுதியான முறையில் நிபந்தனை விதித்திருந்த நிலையிலும் ஒரு சிலர் இது குறித்து தகவல்களை கசியவிட்டு உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ரஜினியின் ஏமாற்றத்திற்கு இதுதான் உண்மையான காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்