1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (16:49 IST)

ரஜினி, கமல், ராமதாஸ்: திமுக, அதிமுகவுக்கு எதிராக 3வது அணி??

ரஜினி, கமல், பாமக ஆகியோர் இணைந்து மூன்றாம் அணி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்ட் மாதம் பொதுக் கூட்டம் நடத்துவார் என்றும், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்தார். 
 
மேலும், பாமக இவருடன் கூட்டணி வைக்கும் என்றும், தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார். தமிழருவி மணியனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கமல் ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். 
 
இந்நிலையில் ரஜினி, கமல், பாமக ஆகியோர் இணைந்து மூன்றாம் அணி அமைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி அமைந்தால் அது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை திமுக பக்கம் முழுதாக சேரவிடாமல் தடுக்கும் என தெரிகிறது.