1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (10:57 IST)

2 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் மையம்.. திமுகவின் பதில் என்ன?

kamal- mk stalin
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக கூட்டணியில் அக்கட்சி இரண்டு தொகுதிகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மற்றும் தென்சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை கமல் கட்சி கேட்க இருப்பதாகவும் இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி கொடுக்க  முடியாத நிலையில் தற்போது புதிதாக கமல் கட்சியும் இணைந்துள்ளது மட்டுமின்றி இரண்டு தொகுதிகள் கேட்பது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தொகுதி மட்டுமே கமல் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்றும் திமுக பிரமுகர்கள் கூறுகின்றனர்.

ஒரு தொகுதிக்காக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இணையுமா அல்லது மாற்று முடிவு எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Mahendran