வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:48 IST)

சிவகங்கைக்கு பதில் தென்சென்னை: காங்கிரஸ் திட்டத்தை திமுக ஒப்புக்கொள்ளுமா?

dmk congress
சிவகங்கை தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடியாது என திமுக கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சிவகங்கைக்கு பதில் தென் சென்னை தொகுதியை தர வேண்டும் என காங்கிரஸ் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த முறை சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை கேட்டு பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தென் சென்னையின் திமுக எம்பி ஆக இருக்கும்  தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று கூறப்படும் நிலையில் அந்த தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்று குரல் எழுப்ப இருப்பதாக தெரிகிறது.

 கார்த்திக் சிதம்பரம் மீண்டும் போட்டியிடக்கூடாது என திமுக விரும்புவதால் சிவகங்கையை எடுத்துக்கொள்ள இருப்பதால் அதற்கு பதிலாக தென் சென்னை தொகுதியை தங்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடலாம் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் கமலஹாசனும் தென் சென்னை தொகுதியை குறி வைத்துள்ளதாக கூறப்படுவதால் அந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva