ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 அக்டோபர் 2018 (18:49 IST)

3 பாயிண்ட், போட்டு தாக்கிய ராம்: நக்கீரன் கோபால் விடுதலைக்கு முக்கிய காரணமா?

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியானது. இதில் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை. அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடியாது எனக்கூறி நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
 
இதில் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராமிற்கும் முக்கிய பங்கு உண்டு. நீதிமன்றத்திற்கு நேரில் வந்து நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக பேசினார். என்.ராம் அளித்த பேட்டி பின்வருமாறு:

எனது வாதத்தில் மூன்று பாயிண்டுகளை வைத்தேன். முதலாவதாக 124வது பிரிவை அனுமதித்தால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று சொன்னேன்.
 
இரண்டாவதாக, நீதிபதி என்னிடம், இதுபோன்ற போட்டோக்களை பிரசுரிக்கலாமா? என்று கேட்டார். நான் போட்டிருக்க மாட்டேன். ஆனால் பல விதமான ஜர்னலிசத்திலே இது இருக்கிறது என பதில் அளித்தேன்.
 
மூன்றாவதாக ஆளுநரின் பதவியை இந்த சர்ச்சையில் புகுத்துவது சரியாக இருக்காது. இது மோசமாக இருக்கும் என்ற பாயிண்டைச் சொன்னேன். மேலும், முதல் முறையாக 124 பிரிவை இதழுக்கு எதிராக அமல்படுத்தியுள்ளனர். இது மோசமான முன்னுதாரணமாக மாறிபோக கூடாது என்பதற்காக நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக பேசினேன் என கூறியுள்ளார்.