திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 9 அக்டோபர் 2018 (15:01 IST)

சின்மயி சொல்வது உண்மை என்றால், போலீசுக்கு போயிருப்பார்: பிரசாந்த்

அண்மையில் பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் யூ ட்யூப் விமர்சகர் பிரஷாந்த், தனக்கும் சில பெண்களுக்கு தவறாக மெசேஜ் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
 
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரஷாந்த், சில ஆண்டுகளுக்கு முன், ட்விட்டரில் ராஜன் லீக்ஸ் என்ற பெயரில் ஒருவர் இயங்கி வந்தார். அவர் சின்மயி குறித்து தவறாகப் பதிவிட்டதாக சின்மயி போலீசில் புகார் செய்து, ராஜன் கைதாகும்வரை போனது. 
 
என் ஊரான அவிநாசியை சேர்ந்தவர்தான் அவரும். ஒரு அரசு ஊழியர் என்பதால், அவரது வேலை போய்விடும், குடும்பம் கஷ்டப்படும் என்று அவருக்காக சின்மயியிடம் பேசினேன். அவர் தவறே செய்திருந்தாலும், அவர் மீது கைது நடவடிக்கையெல்லாம் வேண்டாம். கைது செய்தால் அவர் பணியில் இருந்து இடை நீக்கம்  செய்யப்படுவார் என்று கேட்டுக்கொண்டேன். 
 
அதற்கு சின்மயி அளித்த பதில் சரியான முறையில் இல்லை. அப்போது அவருடன் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டது, அதில் இருந்து என்னை அடிக்கடி அவர் வம்புக்கு இழுத்துவந்தார். அப்படித்தான் இதையும் செய்திருக்கிறார். இவர் சொல்வது உண்மை என்றால், நிச்சயம் அவர் போலீசுக்கு போயிருக்க வேண்டும் அதையும் அவர் செய்யவில்லை. 
 
அதற்கு மேல் இது உண்மையாக இருந்திருந்தால் நானே ஒப்புக் கொண்டிருப்பேன். அவர் ஏதோ திட்டம்போட்டு செய்கிறார், செய்யட்டும் எதுவரை போகிறதோ போகட்டும் பார்ப்போம் என்று பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.