செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (15:35 IST)

என்ன கேள்வி கேட்டாலும்....அது ஒரு போபியா - யாரை சொல்கிறார் எஸ்.வி.சேகர்?

பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் டிவிட்டரில் தெரிவித்துள்ள ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், அவரை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அதைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் கோபால் மற்றும் வைகோவை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ காவல்துறை, நீதித்துறை இரண்டை பற்றியும் அவதூறாக விமர்சித்த ஹெச்.ராஜா கைது செய்யபப்டவில்லை. பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி மோசமாக விமர்சித்த எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. ஆனால், நக்கீரன் கோபாலை கைது செய்துள்ளனர். இந்த அடக்கு முறை ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்” எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் “சிலர் பேட்டிய துவங்கு முன் என்ன கேள்வி என கேட்டுக்கொண்டு பின் பதிலளிப்பார். இவரோ என்ன கேள்வி கேட்டாலும் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கைது பண்ணலன்னு பதில் கேள்வி கேட்டுட்டுதான் பேச ஆரம்பிப்பாராம். இது ஒரு PHOBIA.  வரும் மே மாதம் சரியாகிவிடும்” என ஒரு பதிவை இட்டிருந்தார்.
 
அதில் அவர் யாரை கூறுகிறார் என குறிப்பிடவில்லை என்றாலும், ஸ்டாலினைத்தான் அவர் விமர்சித்துள்ளார் என கருதப்படுகிறது.