ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:38 IST)

விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்.!!

Hybrid Rocket
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. 
 
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா என்ற நிறுவனம், 4 குழுமத்துடன் இணைந்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட் உருவாக்கியிருக்கிறது. 
 
இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும். இந்நிலையில் இந்த ராக்கெட்டானது,  மூன்று சோதனை செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 7 மணியளவில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து வானில் ஏவப்பட்டது. 3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ரீயூசபிள் ராக்கெட், வானில் 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டதாகும்.


மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி பல முறை செயற்கைக்கோளை ஏவலாம் என கூறப்படுகிறது. இதனால் செலவு மிச்சப்படுத்தலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.