1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. ISRO successfully launched GSLV-F14 rocket

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F14 ராக்கெட்.. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து..!

இஸ்ரோ
வானிலை மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டறியும் INSAT-3DS என்ற அதிநவீன செயற்கைக் கோளை GSLV-F14 ராக்கெட் மூலமாக விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இஸ்ரோ வடிவமைத்துள்ள GSLV-F14 என்ற ராக்கெட் பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருபப்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் கவுண்ட்-டவுன் சமீபத்தில்  தொடங்கியது.
 
இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைத்துள்ள அடுத்த ராக்கெட் GSLV-F14. வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தில் உருவான 'இன்சாட் - 3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜிஎஸ்எல்வியின் அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்..! இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!!