வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:26 IST)

ஓடும் பேருந்து கொழுந்து விட்டு பற்றி எரிந்தது ஓட்டுனர்கள், பயணிகள் அலறி அடித்தபடி இறங்கி ஓட்டம்!

சென்னை புழல் அடுத்த தண்டல்கழனியில் தனியார் டிராவல்ஸ் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் தென் மாவட்டங்களுக்கு இந்த டிராவல்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
 
இரவு வழக்கம் போல கம்பெனியிலிருந்து நெல்லையை சேர்ந்த கண்ணன், நாகர்கோவிலை சேர்ந்த மகேஷ் ஆகிய இரண்டு ஓட்டுனர்கள் டிராவல்ஸ் பேருந்து எடுத்துக்கொண்டு செங்குன்றம் சென்று அங்கிருந்து 3 பயணிகளை ஏற்றி கொண்டு வந்தனர்.
 செங்குன்றத்திலிருந்து சென்னை நோக்கி பேருந்து சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது காவாங்கரையில் திடீரென முன்பக்கம் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட மூன்று பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுனர்கள் அனைவரும் அலறி அடித்தபடி பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
 
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.
 
பேருந்து கொழுந்து விட்டு தீப்பிடித்து எரியும் நிலையில் சர்வீஸ் சாலையில் மட்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு முக்கிய சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுடன் இயங்கி வருகிறது. 
 
பேருந்து கொழுந்து விட்டு எரித்து  வந்ததால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு நிலவி வந்தது.