விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!
விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி வைத்து மேட்ரிமோனி இணையதளம் மூலம் மூன்று பேரை திருமணம் செய்து 1.21 கோடி ரூபாய் மோசடி செய்த இளம் பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபர் மணப்பெண் தேடிய நிலையில், அவருக்கு ஆன்லைன் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். தன்னை சீமா என்று அறிமுகம் செய்து கொண்ட அவர், தனக்கு உறவினர்கள் பெரிதாக இல்லை என்று கூறிய நிலையில், அவரை நகைக்கடை அதிபருக்கு பிடித்து விட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் ரொக்கம் மற்றும் தங்கம் வெள்ளி நகைகளை சுருட்டி விட்டு சீமா மாயமாகிவிட்டார்.
இந்த நிலையில் அந்த பெண்ணை தேடி, அவருடைய சொந்த ஊருக்கு நகைக்கடை அதிபர் சென்றபோது, என்னை தேடி வந்தால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, போலீஸ் புகார் செய்வேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனை அடுத்து, அந்த நகைக்கடை அதிபர் போலீசில் புகார் செய்த நிலையில், காவல் நிலைய அதிகாரிகள் சீமாவிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது விசாரணையில், அவர் ஏற்கனவே ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் விவாகரத்தான பணக்காரர்களை குறி வைத்து திருமணம் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.
கடந்த நான்கு மாதங்களில், அவர் மூன்று பேரை திருமணம் செய்துள்ளதாகவும், இதுவரை 1.21 ஒன்று கோடி வரை மோசடி செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து, சீமாவை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு உடந்தையாக வேறு யாராவது இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Siva