புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (19:01 IST)

சென்னை கே.பி. பார்க் கட்டிடத்தின் தரம்: ஐஐடி ஆய்வறிக்கை தாக்கல்

சென்னை கே.பி. பார்க் கட்டிடத்தின் தரம்: ஐஐடி ஆய்வறிக்கை தாக்கல்
 சென்னை கேபி பார் கட்டிடத்தின் தரம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களுக்கு முன் எழுந்த நிலையில் இந்த கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய ஐஐடி குழு ஒன்று அமைக்கப்பட்டது என்பதும் இந்த குழு கடந்த சில நாட்களாக கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஐஐடியின் ஆய்வு தற்போது முடிவடைந்ததை அடுத்து இது குறித்து ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆய்வறிக்கையில் சென்னை கேபி பார் கட்டிடத்தின் பூச்சு வேலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் சிமெண்டின் அளவு தேவையைவிட மிகக்குறைவாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி மின்சார இணைப்பு சார்ந்த சாதனங்களிலும் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் கட்டிடத்திற்கு தேவையான பராமரிப்பு பணிகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது