ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (12:50 IST)

கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசை! – முதலிடத்தை பெற்ற சென்னை ஐஐடி!

கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசை! – முதலிடத்தை பெற்ற சென்னை ஐஐடி!
மத்திய கல்வி அமைச்சகத்தில் ஆண்டு தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான டாப் 10 பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த ஆண்டு சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் மும்பை ஐஐடியும் உள்ளன. பொறியியல் படிப்புக்கான முதல் 10 இடங்களில் 8 ஐஐடிகள் மற்றும் 2 என்.ஐ.டிகள் இடம்பெற்றுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தித்துள்ளது.