திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (09:40 IST)

விஜய் சேதுபதி பெயரில் கட்டப்படும் கட்டிடம்… பெப்சி தொழிலாளர்களுக்காக!

பெப்சி தொழிலாளர்களுக்காக சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

திரைத்துறையில் தினக்கூலி பெறும் 24 வகையான ஊழியர் சங்கங்களின் தொகுப்பாக பெப்சி செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக ஆர் கே செல்வமணி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்களின் நலன்களுக்காக அடுக்குமாடி கட்டிடம் கட்ட உள்ளனர்.

இதற்காக நடிகர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு திரைப்படம் நடித்துத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் வீடு கட்ட நடிகர் விஜய் சேதுபதி நன்கொடையாக ரூபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இதை முன்னிட்டு அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு விஜய் சேதுபதி டவர்ஸ் என்ற பெயரை வைத்துள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் பெயர்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாம்.