திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:37 IST)

தொட்டாச்சிணுங்கி போல தொட்டால் விழும் கட்டிடம்! – ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை??

சென்னை புளியந்தோப்பு ஹவுசிங் யூனிட் கட்டிட விவகாரம் குறித்து ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி,பார்க்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அக்குடியிருப்புகளில் குடியேறி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் சுவர்கள் கை வைத்தாலே உதிர்ந்து கொட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்ட நிலையில் பேசிய திமுக பரந்தாமன் “தோட்டாச்சிணுங்கி போல தொட்டால் உதிரும் குடியிருப்பதை அதிமுக கட்டியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்பு விவகாரத்தில் அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.