இந்தியாவின் முதல் நிலநடுக்கும் எச்சரிக்கை செயலி! – ரூர்கி ஐஐடி சாதனை!
இந்தியாவில் நிலநடுக்கம் உருவாவதற்கு முன்னதாகவே அதை கண்டறிந்து எச்சரிக்கும் செயலியை ரூர்கி ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் உத்தரகாண்டில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் மொபைல் செயலியை ரூர்கி ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன், ரூர்கி ஐஐடி இணைந்து தயாரித்துள்ள இந்த செயலி நிலநடுக்கத்தை உணர்ந்து அதனால் பாதிக்கப்படும் இடங்களை கணக்கிட்டு அங்குள்ளவர்களை எச்சரிக்கும் எனவும், நிலநடுக்கத்தால் சிக்கி கொண்டவர்களின் இருப்பிடத்தை அறிந்து அவர்களை மீட்கவும் இது உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்களில் செயல்படும் வகையில் கிடைக்கும் இந்த ”உத்தர்கண்ட் பூகம்ப் அலர்ட்” செயலியை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.