வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (15:17 IST)

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் மழை பெய்யுமாம் ! வைரலாகும் துண்டு நோட்டீஸ்

கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினியின் பிறந்தநாள் அன்று  தன் அரசியல் வருகையை உறுதி செய்தார். அன்றுமுதல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் எப்பொது ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பார். என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆனால் இதோ.. அதோ.. என்று நாட்களை இழுத்துக்கொண்டிருந்த ரஜினி, எனது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று பளிச் என பத்திரிக்கையாளர்களுக்குச் சொன்னார்.
 
இந்நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு ரஜினியை பற்றிய ஒரு நோட்டீஸ் வைரலாகிவருகிறது.
 
அதாவது சிவசக்தி அருணகிரி என்பவர் கடந்த 15- 5 - 2017 ஆம் ஆண்டு ஒரு துண்டுநோட்டீஸை அச்சடித்து வெளியிட்டார்.
 
அதில்,  ரஜினி அரசியலுக்கு வந்தே தீரவேண்டும். ஏனெனில் அவர் வராத காரணத்தால் இயற்கை கட்டுப்பட்டு இருக்கிறது. இனியும் வர கால தாமதாகமாக்கினால்.தமிழ்நாடு கேரளா ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலமும் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மாத்திரமே இயற்கை மழை பொழியும். நிலத்தடி நீர் மட்டம் உயரும் மக்களுக்காக அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும். 
 
இது இயற்கையின் தீர்ப்பு என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
 
 
தற்போது நெட்டிஷன்களின் கண்களில் சிக்கிய இந்த துண்டு நோட்டீஸ் சமூக வலைதளஙக்ளில் வைரலாகிவருகிறது.