புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 மே 2019 (15:32 IST)

அதிமுக ஆட்சி முடிவடையும் நாளில் ரஜினி அரசியலுக்கு வருவார் – தமிழருவி மணியன் கருத்து !

அதிமுக ஆட்சி என்று முடிவடைகிறதோ அன்றுதான் ரஜினி அரசியலுக்கு வருவார் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறேன் என சொல்லி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசியலுக்கு வருவது  உறுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டி என அறிவித்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அரசியலில் இறங்கவும் இல்லை, கட்சியும் ஆரம்பிக்கவில்லை. வரிசையாகப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ரஜினியின் அரசியல் வருகைக் குறித்து ஆரம்பம் முதலே ஆதரவாகப் பேசி வந்தவர்களுள் தமிழருவி மணியனும் ஒருவர். ரஜினியின் நீண்டகால நண்பரான இவர் அவரது  அரசியல் வருகை எப்போது என்பது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘அதிமுக ஆட்சி என்று முடிவு வருகிறதோ அன்று தான் ரஜினி அரசியலுக்கு வருவார். அல்லாமல் திமுக - அதிமுக கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டுமென்றால் ரஜினி அரசியலுக்கே வரமாட்டார்.’ எனத் தெரிவித்துள்ளார்.