வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (17:43 IST)

பிரக்யா சிங்கிற்கு மன்னிப்பே கிடையாது - பிரதமர் மோடி ஆவேசம்

அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோட்சே பற்றி பேசியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் உண்டாகி வருகின்றன. பல அரசியல் தலைவர்களும் கமலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் போபால் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் பெண் சாமியார் பிரக்யா சிங் ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் கமல் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது “நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர். அவர் தேசபக்தராகவே இருந்தார், இருக்கிறார், இருப்பார். கோட்சேவை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும்” என அவர் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பாரதீய ஜனதா கட்சி “பிரக்யா சிங்கின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் கருத்து கிடையாது.” என்று மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமையில் இருந்து கண்டன குரல்கள் எழவும் ப்ரக்யாசிங் தனது கருத்துக்காக மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி ப்ரக்யாசிங்கின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  “மகாத்மா காந்தியை அவமதிப்பு செய்த ப்ரக்யாசிங்கிற்கு மன்னிப்பே கிடையாது” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.