புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 மே 2019 (09:59 IST)

எனக்கு தெரியாதே? கல்வெட்டில் ”ரவீந்திரநாத் எம்.பி.” குறித்து எடப்பாடியார்!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ”ரவீந்திரநாத் எம்.பி.” என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு மழுப்பல் பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 
 
இந்நிலையில், தேனி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் ஓபி ரவீந்தரநாத் தேர்தல் முடிவுகள் வரும் முன்னே கல்வெட்டுகளில் தனது பெயருக்குப் பின்னால் எம்.பி. எனப் போட்டுக்கொண்டுள்ளார். 
இதுகுறித்து நேற்று காலை முதலே மீடியாக்களில் பலத்த  விமர்சனங்கள் எழுந்ததால் ரவீந்தரநாத் எம்.பி என்பது மறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 
 
இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் பட்டும் படாமல் என்னுடைய கவனத்திற்கு இந்த விஷயம் இதுவரை வரவில்லை என கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு பதில் அளித்தார்.