கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Last Modified திங்கள், 20 மே 2019 (11:29 IST)
17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்றுடன் முடிந்தது. தேர்தல் குறித்து வெளியான கருத்துகணிப்புகள் தமிழ்நாட்டில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்துகணிப்பு குறித்து பேசுகையில் “2016 சட்டசபை தேர்தலில் நடந்த கருத்துகணிப்புகள் அனைத்தும் இப்படித்தான் பொய்யாக இருந்தன. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் கருத்துகணிப்புகளே அல்ல. அவை கருத்து திணிப்புகள். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும்” என்று அவர் தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :