முடிந்தது கோடை.. கோவையில் கொட்டியது கனமழை..!
கடந்த சில வாரங்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர் என்பதும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்துள்ள நிலையில் மழையும் பெய்ய ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் கோவையில் கன மழை பெய்ததாகவும் இதனால் தட்பவெப்ப நிலை மாறி குளிர்ச்சியாக இருந்தது என்றும் கூறப்படுகிறது
கோவை மட்டும் இன்றி தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இனி படிப்படியாக கோடை வெப்பம் குறைந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதனால் கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தப்பித்து விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva