வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2025 (17:49 IST)

சயீப் அலிகான் உண்மையாகவே தாக்கப்பட்டாரா? அல்லது நாடகமா? மகாராஷ்டிரா அமைச்சர் சந்தேகம்..!

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதாக கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு வெளியே வந்த நிலையில், அவர் ஐந்து நாட்களில் டிஸ்சார்ஜ் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதேஷ் ரானே  இந்த சம்பவம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்த வீடியோவை  பார்க்கும் போது சயீப் அலிகான் தாக்கப்பட்டவர் போலவே தெரியவில்லை என்றும், அவர் நடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்புகிறார். எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கத்திக்குத்தால் ஆழமாக காயமடைந்த ஒருவர் எப்படி ஐந்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran