திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 மே 2023 (07:58 IST)

இன்றுடன் நிறைவு பெறுகிறது அக்னி நட்சத்திரம்.. இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..!

அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை உள்பட பல நகரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தது என்பது இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva