அவசர அவசரமாக சிசேரியன் செய்யும் அமெரிக்கவாழ் இந்திய தாய்மார்கள்.. டிரம்ப் கெடுபிடி காரணமா?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடுபிடி காரணமாக, அமெரிக்க வாழ் இந்திய தாய்மார்கள் அவசர அவசரமாக தங்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளை சிசேரியன் மூலம் வெளியே எடுக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளே அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்குவது குறித்த புதிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை அமெரிக்க குடிமகனாக இருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, அமெரிக்க குடியுரிமை தங்கள் குழந்தைக்கு கிடைக்கச் செய்வதற்காக, அமெரிக்காவில் தற்போது கர்ப்பமாக இருக்கும் சில பெண்கள் அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரமாக சிசேரியன் முடிவை எடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 19ஆம் தேதிக்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க தடை விதிக்கப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva