செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வெள்ளி, 26 மே 2023 (07:50 IST)

சென்னை புறநகர் பகுதியில் காற்றுடன் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

சென்னை புறநகர் பகுதியில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது என்பதும் 17 நகரங்களில் நேற்று 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பெருங்களத்தூர் முடிச்சூர் குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு திடீரென ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. 
 
ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து உள்ளதாகவும் மின்சார கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக மின் வினியோகம் தடைபட்டது.
 
இருப்பினும் நல்ல மழை பெய்து வெப்பம் தணிந்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva