1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வெள்ளி, 26 மே 2023 (13:59 IST)

17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
 தமிழகத்தில் ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மிதமான மழை முதல் கன மழை வரை சில பகுதிகளில் பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்  ஆகிய 17  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva