வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:15 IST)

ரூ.15 வரை பெட்ரோல் விலை குறையும்: ஹெச்.ராஜா

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எப்போது சர்ச்சையாக பேசி பிரச்சனையில் சிக்கிகொள்பவர். ஆனால், இந்த முறை ஒரு நல்ல தகவலை அவர் வெளியிட்டுள்ளார். 
 
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமத்தில் பங்கேற்ற ஹெச்.ராஜா நிகழ்ச்சியில் மத்திய அரசின் சாதனைகள் எடுத்துரைத்தார். 
 
அப்போது அவர் பேசியது பின்வருமாறு, இதுவரை எங்கு பார்த்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துதான் பலர் வருத்தத்தையும் விமரசங்களையும் முன்வைத்து வருகின்றனர். 
 
கடந்த 5 - 6 நாட்களாக பெட்ரோலின் விலை ரூ.3 அளவிற்கு குறைந்துள்ளது. அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வேறு வரவுள்ளது. ஓட்டு கேட்டு இன்னும் 120 நாட்களில் உங்களிடம்தான் வந்து நிற்க வேண்டும். 
 
எனவே, அதற்கு கண்டிப்பாக பெட்ரோல், டீசல் விலை ரூ.15 வரை குறையும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது அதிக அளவில் பகிரபட்டு வருகிறது.