பத்தோடு பதினொன்னா? வேதனையில் பொன்னார்!
பாஜகவின் மூத்த தலைவரான பொன்.ராதகிருஷ்ணன் அவர் பங்கேற்ற விழாவில் மக்கள் கூட்டம் இல்லாததால் வந்திருந்த 10 பேரோடு சேர்ந்து அமர்ந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார மையம் மற்றும் நலவாழ்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதை பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மக்கள் கூட்டம் இல்லாததால், மேடையில் ஏறாமல் பார்வையாளர் வரிசையில் அரசு அதிகாரிகளோடு அமர்ந்து கொண்டார். மேலும், அரசு விழாவிற்கு பொதுமக்களை அழைக்காமல் விழா நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் வேதனைப்பட்டுள்ளார்.
பின்னர், அதிகாரிகளிடம் விழாவிற்கு பொதுமக்கள் வந்தால் பேசுகிறேன். இல்லை என்றால் உடனே கிளம்பி விடுவேன் என்றும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவரி காத்திருக்க வைத்து 100 மக்களை திரட்டி கூட்டு வந்த பிறகுதான் மேடை ஏறி பேசினார்.