வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (13:37 IST)

சபரிமலை விவகாரம் ; நெருப்புடன் விளையாடாதீர்கள் : அமித்ஷா எச்சரிக்கை

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களூம் செல்லாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டதன் பின் அக்டோபர் மாதம் 17 –ந்தேதி நடை சிறப்பு வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.

அதையடுத்து அன்று கோயிலுக்குள் செல்ல முற்பட்ட பெண் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பகுதியினர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை சேர்ந்தவர்கள். அதனால் போலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் நடந்த வன்முறை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், கேரள அரசின் உத்தரவுபடி சுமார் 1400 பேரை கைது செய்துள்ளனர். இதில், ஐய்யப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடக்கம். 

இதனையடுத்து நேற்று கேரள மாநிலத்தில் பாஜகவின் புதிய கிளை அலுவலகததை திறக்க வந்த பாஜக தலைவர் அமித்ஷா இந்த கைது நடவடிக்கை குறித்துப் பேசினார். அதில் ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கேரள அரசு பக்தர்களின் நம்பிக்கையை அவமதிக்கிறது. அது சம்மந்தமான போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த நடவடிக்கை நெருப்புடன் விளையாடுவது போன்றது. இதற்கான பலனை இந்த அரசும் முதல்வர் பினராயி விஜயனும் எதிர்கொள்வர்.’

மேலும் தீர்ப்பு குறித்து பேசிய அவர் ‘மற்ற எந்த ஐய்யப்பன் கோயிலிலும் பெண்கள் நுழையக்கூடாது என்று எந்த தடையும் இல்லை. ஆனால் சபரிமலை தனித்துவமான வழிபாட்டு முறையைக் கொண்டது. அதன் தனித்துவம் காக்கப்படவேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக எப்போதும் பக்தர்களின் பக்கமே. இந்த விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் வரை பாஜக தொடர்ந்து போராடும்.’ எனத் தெரிவித்துள்ளார்.