Daily Horoscope
✕

மாதவிடாய்!.. மாணவியை வெயிலில் நிற்கவைத்த ஆசிரியர்!.. நடவடிக்கை பாயுமா?!..

Updated: சனி, 20 ஜூன் 2026 (15:30 IST)
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 11 வயது மாணவி மாணவியை மாதவிடாய் காரணம் காட்டி வகுப்பறைக்கு வெளியே பல மணி நேரம் நிற்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதிய உணவு இடைவேளையின் போது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்குமாறு ஆசிரியர் கூறியிருக்கிறார். எனவே, பள்ளி முடியும் வரை அந்த மாணவி வெளியே நின்றுள்ளார். அதன்பின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் அழுதபடியே இதுபற்றி சிறுமி சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ‘அப்படி நடந்திருந்தால் அது மிகப்பெரிய தவறு. விசாரணை அறிக்கை கேட்டிருக்கிறேன். அறிக்கை வந்ததும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியிருக்கிறார்.<>

எல்லாம் காட்டு

கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை 50,500 டாலரா? - ராஜ்மோகன் விளக்கம்...

உலகில் செல்வாக்குமிக்க முஸ்லீம்கள்!.. டாப் 500 பட்டியலில் யார்? யார்?..

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுகவிடம் காசு இல்லை... இது புதுசா இருக்குண்ணே!...

அப்படி பாத்தா மொத்த தவெகவும் ஜெயில்லதான் இருக்கணும்!.. சீமான் கோபம்....

தலைமை செயலகத்தில் சூப்பர் வசதி.. இனி டெக்னாலஜியில் முதல்வர் கலந்துக்குற வீடியோ கான்பரன்ஸ் ரூம் ...

அடுத்த கட்டுரையில்
Show comments