புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 19 ஜூலை 2021 (10:09 IST)

இன்று முதல் தொடங்கும் ஊரடங்கில் எவை எவைகளுக்கு அனுமதி இல்லை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு தனியார் மற்றும் அரசு போக்குவரத்து அனுமதி இல்லை என்றும், மத்திய விமானத்துறை அமைச்சகம் அனுமதிக்கப்பட்டுள்ள விமானங்கள் தவிர வேறு விமானங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சினிமா தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் பார்கள், நீச்சல் குளங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் எந்த விதமான விளையாட்டு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உயிர் இல்லை பூங்காக்களும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற அனைத்திற்கும் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது