1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (08:14 IST)

கொரோனா அப்டேட் - 19 கோடியை கடந்த உலக பாதிப்பு !!

உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியுள்ளது. 
 
ஆம், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.34 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 
 
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.91 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1.26 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 79,100-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.