1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (13:30 IST)

கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
மூன்றாவது அலை வரும் என எச்சரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் அதேசமயம் தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆம், கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 ஆகவும், கோவாக்சின் கொள்முதல் விலை ரூ.215 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 தடுப்பூசிகளும் தலா ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.