திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ரயில், விமான பயணிகளுக்கு நாளை முதல் இ-பதிவு அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாவட்டங்களுக்கு செல்வதற்கும் சென்னையில் உள்ள பகுதியில் செல்வதற்கு இ-பதிவு அவசியம் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது வீட்டில் இருந்து ரயில் மற்றும் விமான நிலையத்திற்கு செல்வதற்கும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து வீட்டிற்கு செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
நாளை முதல் அதாவது ஜூன் 1-ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் சென்றாலும் கூடவே இ-பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அதே போல் விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்தாலும் கூட இ-பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி விமான, ரயில் டிக்கெட்டுகள் உடன் அடையாள அட்டையும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான நிலையங்கள் செல்வதாக கூறி பல தவறான முறையில் ஊர் சுற்றி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.