திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 மே 2021 (13:52 IST)

ஒரே ஒரு பயணிக்காக துபாய்க்கு பறந்த விமானம்! – மும்பையில் ஆச்சர்ய சம்பவம்!

ஒரே ஒரு பயணிக்காக துபாய்க்கு பறந்த விமானம்! – மும்பையில் ஆச்சர்ய சம்பவம்!
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய் செல்ல தடை உள்ள நிலையில் ஒரு நபருக்காக மட்டும் விமானம் புறப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விமானங்களுக்கு பல நாடுகளும் தடை விதித்துள்ளன. அவ்வாறாக இந்தியா – துபாய் இடையேயான விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையிலிருந்து 360 இருக்கைகள் கொண்ட எமிரேட்ஸ் விமானம் ஒன்று துபாய் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே பயணித்துள்ளார். அவரிடம் கோல்டன் விசா இருந்ததால் துபாய்க்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பயணிக்க அவர் எடுத்த டிக்கெட்டின் விலை ரூ.18 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.