வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (14:43 IST)

பயணிகள் வரத்து குறைவு; 12 சிறப்பு ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கால் பயணிகள் வருகை குறைந்துள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் சிலவற்றை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் 12 சிறப்பு ரயில்களை குறிப்பிட்ட காலம் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் விஜயவாடா சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும் ஜூன் 2 முதல் 14ம் தேதி வரையிலும், சென்னை சென்ட்ரல் - புட்டபர்த்தி சிறப்பு ரயில் ஜூன் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும், புட்டபர்த்தி- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 5 முதல் 12ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ஜூன் 1 முதல் 15 வரையிலும், ஏர்ணாகுளம் - கண்ணூர் சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ஜூன் 1 முதல் 15 வரையிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.