எல்லா பக்கமும் கதவ மூடியாச்சி!.. என்ன முடிவெடுக்கப் போகிறார் ராமதாஸ்?...
தமிழக அரசியலில் பலம் வாய்ந்த கட்சியாக, வன்னியர்களின் ஓட்டுகளை வைத்திருந்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், பாமக இப்போது அன்புமணி பாமக, ராமதாஸ் பாமக என இரண்டு பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. ஏற்கனவே அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டார். மேலும் அதிமுக- பாஜக கூட்டணியில் ராமதாஸை சேர்க்கக்கூடாது எனவும் அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
எனவே திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் டாக்டர் ராமதாஸ். ஆனால், சாதி கட்சியான பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தை இருக்காது என சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் திருமாவளவன்.. ஏனெனில் ராமதாஸை விட திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பது முக்கியம் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருதுகிறார். அதோடு, நீங்கள் தனித்து போட்டியிடுங்கள். தேரதலுக்கான செலவை நாங்கள் கொடுக்கிறோம் எனவும் அவர் சொல்லியிருக்கிறாராம்.
ஒருபக்கம் ராமதாஸ் தரப்பில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.. ஆனால் விஜயும் அதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.. ஏனெனில் ராமதாஸ் தரப்பு கேட்கும் தொகுதிகளில் பெரும்பாலானவை வட மாவட்டங்கள். அந்த தொகுதிகளில் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என விஜய் நம்புகிறார்..
மேலும் அந்த தொகுதிகளை ராமதாஸுக்கு கொடுத்தால் அந்த தொகுதியில் உள்ள தலித்துகளின் வாக்குகள் தனக்கு கிடைக்காது எனவும் விஜய் யோசிக்கிறாராம். எனவே அவரும் சாதகமான முடிவை சொல்லவில்லை என்கிறார்கள். எனவே, ராமதாஸ் என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை.