வாடகைக்கு ஆட்களை அமர்த்தி 100 நாய்களை சுட்டுக்கொன்ற கிராம தலைவர்.. போலீஸ் வழக்குப்பதிவு..!
தெலங்கானா மாநிலத்தில் தெருநாய்கள் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1,500 நாய்கள் விஷம் வைத்து மற்றும் ஊசி மூலம் கொல்லப்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் நாகர்கர்னூல் மற்றும் சித்திபேட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 150 நாய்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள தும்மைப்பள்ளி கிராமத்தில், சுமார் 100 நாய்களை கொல்ல வாடகைக்கு ஆட்களை அமர்த்தி, விஷ ஊசிகளை பயன்படுத்தியதாக கிராமத் தலைவர் மீது புகார் எழுந்துள்ளது. இதற்காக ரூ.18,000 பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்றம் கருத்தடை மற்றும் தடுப்பூசி முறைகளையே வலியுறுத்தும் நிலையில், இத்தகைய கொடூரமான கொலைகள் கண்டிக்கத்தக்கவை என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
Edited by Siva