மேலும் 4 சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

train
மேலும் 4 சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
siva| Last Updated: வியாழன், 27 மே 2021 (17:29 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து உள்பட போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சிறப்பு ரயில்கள் மற்றும் சில ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பயணிகளின் வருகை இல்லாததால் பல சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மேலும் நான்கு சிறப்பு ரயில்களில் பயணிகள் வருகை குறைவு காரணமாக ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை - புனலூர், சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :