ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 டிசம்பர் 2023 (07:36 IST)

மீண்டு வருகிறது தென் மாவட்டங்களில்: இன்று முதல் ரயில், விமான சேவை தொடக்கம்..!

Flight
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பேருந்து, ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது.

விமான சேவையும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை மீண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் ரயில்கள் மற்றும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை  தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு இன்று ரயில்கள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Edited by Siva