தொடர்புடைய செய்திகள்
- குமரி-சென்னை விசில்போடு எக்ஸ்பிரஸ்: 750 ரசிகர்களை அழைத்து வர சிஎஸ்கே ஏற்பாடு..!
- சென்னை ஐஐடி மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்! என்ன காரணம்?
- ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ,12 லட்சம் அபராதம்
- சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- ஜியோ சினிமாவில் உச்சம் தொட்ட பார்வையாளர் எண்ணிக்கை… நேற்றைய போட்டியைப் பார்த்தது எத்தனை பேர் தெரியுமா?
மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் -டிடிவி.தினகரன்
சென்னையில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையிலுள்ள மீன்கடைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதிகாரிகள் மீன் கடைகளை அகற்றினர். இதைக் கண்டித்து, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்புகளை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவித்து அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதே சரியான வழியாக இருக்கும்.
அதை விடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவசர, அவசரமாக மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
