1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:24 IST)

சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை உள்பட தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் 36 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகும் என்று தெரிவித்திருந்த நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள 10 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருந்தது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் இயல்பு விட மிக அதிகமாக இருக்கும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்களுக்கும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva