வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (18:46 IST)

பஸ் கண்டக்டரை தாக்கிய பரோட்டா மாஸ்டர்: கோயம்பேட்டில் பரபரப்பு!!!

கோயம்பேட்டில் பயணி ஒருவர் பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநகர பேருந்து நிலையத்தில் பரோட்டா மாஸ்டரான செல்வகுமார் 15F என்ற பேருந்தில் ஏறியுள்ளார். படிகட்டில் நின்று கொண்டிருந்த அவரை பஸ் கண்டக்டர் கீழே இறங்குமாறு சத்தம் போட்டுள்ளார்.
 
இதனால் கண்டக்டருக்கும் செல்வகுமாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு செல்வகுமார் கண்டக்டரை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் மாநகர பேருந்து ஒட்டுநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை அமைதிபடுத்தி மீண்டும்  பேருந்தை இயக்க செய்தனர். இதற்கிடையே கண்டக்டரை தாக்கிய செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.