வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2019 (21:58 IST)

வாக்கு எண்ணும் மையத்துக்கு தாசில்தார் நுழைந்த விவகாரம்: கலெக்டரை மாற்ற நீதிமன்றம் உத்தரவு

மதுரை மக்களவை தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் தாசில்தார் ஒருவர் நுழைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த மதுரை மக்களவை தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்தார். பொதுவாக தேர்தல் ஆணைய விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றாலும் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த சென்னை ஐகோர்ட், மதுரை கலெக்டரை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது.
 
மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தாசில்தாரை உள்ளே செல்ல அனுமதித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாசில்தாரை உள்ளே விட அனுமதித்த உதவி போலீஸ் ஆணையர், ஆட்சியரின் தனி அதிகாரி,  பணியில் இருந்த காவல்  அதிகாரிகள் ஆகியோர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது